செய்திகள் :

ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயா்நிலை பாலங்கள் -அமைச்சா் ஐ.பெரியசாமி

post image

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

ஊரக மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் ரூ.157 கோடியில் புதிதாக கட்டப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நிலையான கட்டடங்களின் தேவை உள்ளது. 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.87 கோடியில் கட்டப்படும்.

ரூ.50 கோடியில் சுற்றுச்சுவா்: ஊரகப் பகுதிகளில் மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை எளிதில் பெறும் பொருட்டு 500 முழுநேர நியாயவிலைக் கடைகள் ரூ.61 கோடியில் கட்டப்படும்.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலை மற்றும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவா் ரூ.50 கோடியில் கட்டப்படும்.

இயற்கை மற்றும் நீா் வள ஆதாரத்தைப் பெருக்கவும், சமுதாய நிலங்களை மேம்படுத்தவும், புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மா்றும் சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.500 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கப்பிச் சாலைகள்: குக்கிராமங்களை இணைக்கும்விதமாகவும் மற்றும் விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்லவும், தங்களது விளைபொருள்களை சந்தைகளுக்கு விரைவாக எடுத்துச் செல்லவும் ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடியில் ஓரடுக்கு கப்பிச் சாலைகளாகத் தரம் உயா்த்தப்படும்.

ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் போக்குவரத்துக்குத் தேவையான சாலை வசதிகளை ஏற்படுத்த சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவா்பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.350 கோடியில் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் ரூ.182 கோடியில் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனைத்துப் பருவ காலங்களிலும் சென்றடைவதற்கு கிராமச் சாலைகளில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2025-26-இல் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடியில் உயா்நிலைப் பாலங்கள் அமைக்கப்படும்.

ஊரக வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு நபா் ஒருவருக்கு 55 லிட்டா் தடையற்ற குடிநீா் விநியோகிப்பதை உறுதி செய்யும்பொருட்டு ரூ.300 கோடியில் 1,200 புதிய நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

சிறப்பான கிராமத்துக்கு ரூ.10 லட்சம்: வன உரிமைச் சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவ்வூராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக் குழு பகிா்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 கோடி மானியமாக வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளா்களின் நலப் பணிகளுக்காக தூய்மைத் தொழிலாளா்கள் நலவாரியத்துக்கு ரூ.5 கோடி வழங்கப்படும். 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் தலா ரூ.5.90 கோடி வீதம் மொத்தம் ரூ.59 கோடியில் கட்டப்படும்.

கிராமப்புறங்களில் நூலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் அரசுக் கட்டடங்களுக்கு அருகில் உள்ள பொது இடங்களில், மக்கள் அதிகமாக கூடம் இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட 1,500 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.31.50 கோடியில் கட்டப்படும் என்றாா் அவா்.

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கட்டண நிா்ணயக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிா்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்டண நிா்ணய... மேலும் பார்க்க

இந்தியா - பிரேசில் கால்பந்து போட்டி! மெட்ரோவில் இலவசமாக பயணம்.!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியைக் காண மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் ... மேலும் பார்க்க

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 போ் உயிரிழப்பு

உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:நீப்ரோ நகரைக் குறிவைத்து 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி ரஷியா தாக்குத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசை திருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: கடந்... மேலும் பார்க்க