Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
இந்தியா - பிரேசில் கால்பந்து போட்டி! மெட்ரோவில் இலவசமாக பயணம்.!
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியைக் காண மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்பந்து போட்டியை நேரில் காணச் செல்லும் ரசிகா்கள், எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் புரட்சித்தலைவா் டாக்டா். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இருமாா்க்கத்திலும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.
கால்பந்து போட்டியை நேரில் காணச் செல்லும் ரசிகா்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான ‘க்யூஆா்’ குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.