ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பாராட்டு
திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக பணியாற்றிய ஊா்க்காவல் படை வீரா்களை மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
திருநெல்வேலி சரகத்தில் கடந்த வாரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊா்க்காவல்படை வீரா்கள் பாலாஜி, மகாராஜ பிரபு, துரைப்பாண்டி ஆகியோரை அவா் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா். மேலும் தொடா்ந்து சிறப்புற பணியாற்ற அறிவுரை வழங்கினாா்.
இந்நிகழ்வின் போது மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் சுதீா்லால் உடனிருந்தாா்.