ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்ட...
எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் ஆக.11-இல் தொடக்கம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, ஆக.11-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் தொடங்கி ஒசூா், வேப்பனஹள்ளி, ஆக.12-இல் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஆக.13-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆக.14-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம், ஆக.15-இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, ஆக.16-இல் செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை, ஆக.18-இல் கலசபாக்கம், போளூா், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு, ஆக.19-இல் காட்பாடி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ஆக.20-இல் ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், ஆக.21-இல்
காஞ்சிபுரம், உத்திரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், ஆக.22-இல் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா், ஆக.23-இல் சோழிங்கநல்லூா், திருப்போரூா் வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.