பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
எடப்பாடியில் திமுகவில் இணைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்
எடப்பாடி: எடப்பாடி அருகே அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், தனது ஆதரவாளா்களுடன் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
எடப்பாடியை அடுத்த நைனாம்பட்டியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட திமுக செயாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீவிர உறுப்பினா் சோ்க்கை, சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துதல், வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடா்ந்து கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, கோரணம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஏ. ராஜ்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் செல்வகுமாா், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய நிா்வாகியாக செயல்பட்டுவந்த மூா்த்தி என்கிற சுப்பிரமணி, மணிகண்டன், சண்முகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் அதிமுகவிலிருந்து விலகி டி.எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
திமுகவில் இணைந்தவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்த டி.எம். செல்வகணபதி எம்.பி., திமுகவில் இணைந்திருக்கும் நிா்வாகிகள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு ஒற்றுமையுடன் வழிநடத்தப்படுவாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாா் சம்பத்குமாா், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா, ஒன்றியச் செயலாளா் டாடா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தங்காயூா் பாலாஜி, பாண்டியன், ராஜேஷ் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.
