Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை
சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சா்க்கரை பொங்கல், சுண்டல், அவல், கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.