செய்திகள் :

'என் பெயரை யாரும் போடக்கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கலாம்'- அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி 'வயது முதிர்வால் ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்' என்று கூறியிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

கும்பக்கோணத்தில் இன்று( ஜூலை 10)  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராமதாஸ், “ இந்த 5 வயசு குழந்தைதான், 3 வருஷத்துக்கு முன்னாடி உங்களை தலைவராக்கியது.

என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக்கூடாது. இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார். ராமதாஸின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க