செய்திகள் :

`எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்தது முதலே... அமைச்சர், எம்.பி, நீக்கம், இணைப்பு - யார் இந்த அன்வர் ராஜா?

post image

இன்று காலை அன்வர் ராஜா அண்ணா அறிவாலயத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

அதிமுகவின் சீனியர் முகம் அன்வர் ராஜா. இவர் எம்.பியாகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து, அதிமுகவில் இருந்து வருபவர் இவர்.

இவர் அண்ணா அறிவாலயத்திற்கு வரவே பரபரப்பு தொற்றி கொண்டது.

அதிமுக - பாஜக கூட்டணியில் அதிருப்தியாக இருந்த இவர், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

யார் இந்த அன்வர் ராஜா?

ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து அதிமுகவில் இருந்து வந்தவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் போன்ற பதவியில் இருந்தவர், ஜெயலலிதா காலத்தில் எம்.எல்.ஏ, அமைச்சர், எம்.பி, தலைமைக் கழக பொறுப்பு போன்ற பதவிகளை வகித்து வந்தார்.

அதிமுகவின் இஸ்லாமிய சமூகத்தின் முகமாக திகழ்ந்து வந்தார்.

2021-ம் ஆண்டு தேர்தல்...

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தலில், 'பாஜக உடனான கூட்டணியே அதிமுகவின் தோல்விக்கு காரணம்' என்று கடுமையாக சாடியவர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர்.

மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி - அன்வர் ராஜா
எடப்பாடி பழனிசாமி - அன்வர் ராஜா

அதிமுகவின் இஸ்லாமிய முகம்

இவரது நீக்கத்திற்கு பிறகு, அதிமுகவில் இஸ்லாமிய முகம் தேவைப்பட்டது. அதற்காக, தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக ஆக்கினார்கள். ஆனால், அது பெரியளவில் கைக்கொடுக்கவில்லை.

ஏற்கனவே பாஜக உடனான கூட்டணியால், அதிமுகவிற்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினரின் வாக்குகளும் அடிவாங்கியது. இதனால் தான், மீண்டும் அன்வர் ராஜாவை கட்சியில் சேர்த்தனர். இவருக்கு ராமநாதபுரத்தில் தனி செல்வாக்கு உண்டு.

பின்பு, அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது.

தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி அமைந்துள்ளதால், அதிருப்தி அடைந்த அதிமுக சீனியர்களில் இவரும் முக்கியமானவர்.

இது குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஓப்பனாகவே கமென்ட் செய்தார். தற்போது, அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

இனி அதிமுக தனது இஸ்லாமிய முகமாக யாரை முன்னிறுத்தும்... திமுகவிற்கு இவரது இணைப்பு கைகொடுக்குமா? என்பது இனி வரும் காலத்தில் தெரியும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது...தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Achuthanandan: கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். வயது... மேலும் பார்க்க