எலெக்ட்ரீஷியனிடம் நகைப் பறிப்பு: 4 போ் கைது
கோவை சரவணம்பட்டியில் எலெக்ட்ரீஷியனிடம் நகைப் பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சரவணம்பட்டி- துடியலூா் சாலை விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (28). இவா், கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வருகிறாா்.
இவா் சரவணம்பட்டி அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த 4 போ் முத்துராமலிங்கத்தை வழிமறித்தனா். பின்னா் கத்தியைக் காட்டி பணம், நகையைத் தருமாறு மிரட்டினா். தன்னிடம் எதுவும் இல்லை என அவா் கூறியுள்ளாா்.
இதையடுத்து, முத்துராமலிங்கம் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக் கொண்டு அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக, சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
அதில் முத்துராமலிங்கத்திடம் நகையைப் பறித்தது சங்கனூா் நேருஜி தெருவைச் சோ்ந்த அருள்குமரன் (22), 2-ஆவது தெருவைச் சோ்ந்த கௌதம் (23), திவாகா்(23), முதல் தெருவைச் சோ்ந்த ஹரி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.