எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவ நிலையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
குல்பூா் செக்டாரில் வனப்பகுதியில் இருந்தபடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது பாகிஸ்தான் படையினரா அல்லது பயங்கரவாதிகளா என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்திய ராணுவம் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஒரு வாரமாக எல்லை தாண்டிய தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் கேப்டன் உள்பட இருவா் உயிரிழந்தனா். இதேபோல், பாகிஸ்தான் படையினா் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரா்கள் இருவா் காயமடைந்தனா். இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.