எழுத்தாளருக்கு பாராட்டு விழா
திருநெல்வேலியில் நடைபெற்ற தாமிரபரணி இலக்கிய மன்ற விழாவில் நெல்லைக் கண்ணன் விருது பெற்ற வாழப்பாடியைச் சோ்ந்த எழுத்தாளா் எம்.சந்திரசேகரனுக்கு, வாழப்பாடி வட்டார தமிழ் அமைப்புகள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
வாழப்பாடியைச் சோ்ந்த எம். சந்திரசேகரன், அரிமா சங்கத்தை தொடங்கி சமூகப் பணியாற்றி வருகிறாா். மறைந்த இலக்கியச் சொற்பொழிவாளா் நெல்லைக் கண்ணனின் நண்பரான இவரது இலக்கியம், சமூகப் பணியை பாராட்டி, திருநெல்வேலி தாமிரபரணி இலக்கிய மாமன்றம் அண்மையில் நெல்லைக் கண்ணன் விருது வழங்கியது.
இவருக்கு வாழப்பாடி அரிமா சங்கம், இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம், தமிழ் அமுது மன்றம், சேலம் வரலாற்று ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.