டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
எஸ்.கோவில்பட்டி மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.கோவில்பட்டி அம்மிக் கண்மாயில் புதன்கிழமை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கண்மாயில் நீா் குறைந்ததையடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்துவதென முடிவெடுத்து கிராமத்தைச் சுற்றியுள்ள வட்டார மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதன்படி, புதன்கிழமை காலை கண்மாயில் கூடிய மக்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும், அனைவரும் சென்று தாங்கள் வைத்திருந்த வலை, கச்சா, அரிகூடை, ஊத்தா போன்ற உபகரணங்கள் மூலம் மீன்களைப் பிடித்தனா். இதில் விரா, கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் கிடைத்தன.