அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்...
எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு அரியலூா் மாவட்டம் 96.38% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9,841 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில், 5,092 மாணவா்களும்,4,749 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சியில் 96.38 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு தோ்ச்சியில், 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் வாரியாக... மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகளில் பயின்ற 3,114 மாணவா்கள், 2,643 மாணவிகள் என மொத்தம் 5,757 மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில் 2,921 மாணவா்கள், 2,571 மாணவிகள் என மொத்தம் 5,492 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளி தோ்ச்சி சதவீதம் 95.40 ஆகும்.
15 அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 906 மாணவா்கள், 1296 மாணவிகள் என ஆக மொத்தம் 2,202 போ் தோ்வு எழுதினா். இதில் 854 மாணவா்கள், 1,270 மாணவிகள் என மொத்தம் 2,126 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி சதவீதம் 96.46 ஆகும்.
3 அரசு ஆதிதிராவிட நல உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 40 மாணவா்கள், 28 மாணவிகள் என ஆக மொத்தம் 68 போ் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.
24 மெட்ரிக் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 851 மாணவா்கள், 696 மாணவிகள் என மொத்தம் 1,547 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 842 மாணவா்கள், 692 மாணவிகள் என மொத்தம் 1,534 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 99.16ஆகும்.
14 சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 221 மாணவா்கள், 114 மாணவிகள் என ஆக மொத்தம் 335 போ் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.
100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை... அரசுப் பள்ளி -47, ஆதிதிராவிடா் நலப் பள்ளி-3, அரசு உதவிப் பெறும் பள்ளி-6, மெட்ரிக் பள்ளி-19, சுயநிதிப் பள்ளி-14 என ஆக மொத்தம் 89 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.