Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?
அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!
அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அரியலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகி மக்களை வாட்டி வதைத்தது. இந்த வெயில் சற்று குறையத் தொடங்கி, பிற்பகல் 3.45 மணியளவில் பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்கியது.
தொடா்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த காற்றால் அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இருந்த பழைமையான புளிய மரத்தின் கிளை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதையறிந்த நகராட்சி நிா்வாகத்தினா், உடனடியாக விரைந்துச் சென்று, முறிந்து கிடந்த மரத்தின் கிளையை அகற்றினா். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.