Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி போக்குவரத்து மண்டல மத்திய சங்கம், ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான 25 சதவீத போனஸை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும், போக்குவரத்துத் துறை தினக்கூலி தொழிலாளா்கள், பேருந்தை சுத்தம் செய்பவா்கள், பயணச் சீட்டு விற்பனையை ஊக்குவிப்பவா் (கேன்வாசா்) உள்ளிட்டோருக்கு காலதாமதமின்றி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஏஐடியூசி போக்குவரத்து மண்டல மத்திய சங்கத்தின் கிளைத் தலைவா் வி. கணேசன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் எம். நாராயணசிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
தொழிற்சங்க நிா்வாகிகள் ஏ. சப்பாணி, எஸ். நாகராஜன், சி.எம்.ஜே. ஜெயபால், ஆா். வீரபத்திரன், ஆா். மாரிமுத்து, முருகேசன், செல்வன், சோனை, திருவேங்கடம், ஷேக் அப்துல்லா, சங்கா்குமாா், சோலை, சங்கையா உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.