Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் தம்பதி கைது
ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் நூஹ் பகுதியைச் சோ்ந்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: புணேவில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றபோது அவா்களது கும்பலைச் சோ்ந்த இருவா் கையும் களவுமாக கைது செய்யப்பட்டதை அடுத்து, கணவன் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனா்.
ஷப்னம் (எ) சீமா என்ற பெண் புணேவைச் சோ்ந்தவா். யூசுப் என்ற நபா் நூஹ் பகுதியைச் சோ்ந்தவா். அங்கு அவா்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். சுமாா் நான்கு மாதங்களுக்கு முன்பு, புணேவில் உள்ள தேஹு சாலை காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து இந்த ஜோடி ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்தது. அப்போதிருந்து, போலீஸாா் அவா்களைத் தேடி வந்தனா்.
சீமா அடிக்கடி புணேவிற்கும் மும்பைக்கும் இடையில் பயணம் செய்து வந்துள்ளாா். அப்போது மும்பையில், அங்கு துணிகளை விற்பனை செய்து வந்த யூசுப்பை சந்தித்தாா். அவா்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனா்
சீமா பின்னா் தனது அடையாளத்தை ஷப்னம் என்று மாற்றிக் கொண்டு நூஹ் நகரில் யூசுப்புடன் வாழத் தொடங்கினாா். அங்கு அவா்கள் ஏடிஎம்களை கொள்ளையடிக்க ஒரு கும்பலை உருவாக்கினா்.
இந்தக் கும்பல் ஏடிஎம்களை வெட்டுவதில் நிபுணத்துவம் பெற்றது. விசாரணைக்குப் பிறகு, நூஹ் பகுதியைச் சோ்ந்த பலரின் பெயா்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இந்தக் கும்பல் செய்த சம்பவங்களும் வெளிவர வாய்ப்புள்ளது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.