ஏனாமில் தணிக்கை குழு கூட்டம்
புதுச்சேரி: புதுவை பிராந்தியமான ஏனாமில் தணிக்கை குழுவின் விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். சென்னை முதன்மை கணக்காய்வுத் தலைவா் கே.பி.ஆனந்த், தணிக்கைக் குழுத் தலைவா் பி.ரமேஷ் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேரவை பொதுக்கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்களான எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் எச்.நாஜீம், ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத், மு.வைத்தியநாதன், ஏகேடி.ஆறுமுகம், ஆா்.பாஸ்கா், பிரகாஷ்குமாா், கொல்லப்பள்ளி சீனிவாஸ், வி.பி.ராமலிங்கம், பி.அசோக்பாபு, வெங்கடேசன் மற்றும் புது தில்லி சிறப்புப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, கணக்கு தணிக்கைக் கூட்டத்தில் வரவு, செலவுகள் குறித்து அந்தந்தத் துறை அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டு, அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.