செய்திகள் :

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

post image

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த சாரா என்ற இளம் பெண், தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்து உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் சாரா தனது காதலன் பரிசாக அளித்த லாட்டரி டிக்கெட்டை சரிபார்த்தபோது, அதிர்ஷ்டவசமாக அந்த டிக்கெட்டிற்கு 14,000 டாலர் பரிசு தொகை கிடைத்தது தெரியவந்ததுள்ளது.

Lottery
Lottery (representative)

சாரா தனது பரிசு தொகையை வங்கியில் சேமித்து, தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

தனது காதலனின் மோசடியால் மனம் உடைந்திருந்த சாராவுக்கு, இந்த பரிசு தொகை புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சம்பவம் குறித்து சாரா கூறுகையில், "இது எனக்கு ஒரு புதிய தொடக்கத்தை அளித்துள்ளது. இந்த பணத்தை வங்கியில் சேமித்து, எனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த உள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதனை பலரும் "கர்மாவின் உடனடி பலன்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம்... மேலும் பார்க்க

`85,000 ரூபாயா?' - ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் சாப்பிடப்பட்ட உணவின் பில் வைரல்! - பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசத்தின் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பில் இணையத்தில் வைரலாகி வருகிறது.மத்தியப் பிரதேசத்தின்... மேலும் பார்க்க

"தென்னிந்தியர்களின் டான்ஸ் பார்களால் மகாராஷ்டிர கலாசாரம் கெட்டது" - சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருக்கும் கேண்டீனில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமானதாக இல்லை என்று கூறி கேண்டீன் உரிமையாளரை சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வ... மேலும் பார்க்க

Rishi Sunak: ஆரம்பக் காலத்தில் பணிப்புரிந்த நிறுவனம்... மீண்டும் வேலைக்கு திரும்பிய முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச்... மேலும் பார்க்க

Fake Wedding: இந்திய இளைஞர்களிடம் பிரபலமடையும் 'போலி திருமணங்கள்' - பின்னணி என்ன?

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் "போலி திருமணங்கள்" (Fake Weddings) என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமடைந்து வருகிறது. இது ஒரு உண்மையான திருமணம் இல்லை, மாறாக திருமண விழாவின் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் பாரம்பர... மேலும் பார்க்க

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியுமா?

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் பெலிண்டா மார்க்ஸ் எ... மேலும் பார்க்க