ஏழுமலையானுக்கு ரூ. 2.45 கோடி நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ரூ.2.45 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த ஜினேஷ்வா் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் வென்ச்சா்ஸ் நிறுவனம் எஸ்.வி.
அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியது.
இலங்கையைச் சோ்ந்த ஒரு நன்கொடையாளரும் அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினாா்.
நொய்டாவைச் சோ்ந்த பசிபிக் பிபிஓ பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதானா அறக்கட்டளைக்கு ரூ.45 லட்சம் நன்கொடை வழங்கியது.
நன்கொடையாளா்கள் வரைவோலைகளை தேவஸ்தான தலைவா் பி.ஆா் நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கய்யா செளதரியிடம் அளித்தனா்.