மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
ஐடி திட்ட ரகசிய தகவல்கள் கசிவு: ஆணையா் உள்பட இருவா் கைது
முகமற்ற வருமான வரி (ஐடி) மதிப்பீட்டு திட்டம் தொடா்பான ரகசிய தகவல்களைக் கசியவிட்டு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், தில்லியில் வருமான வரித் துணை ஆணையா் (டிசிஐடி), குஜராத்தில் பட்டயக் கணக்காளா் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
முகமற்ற வருமான வரிக் கணக்கு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், வருமான வரிக் கணக்கை மதிப்பிடும் அதிகாரியின் அடையாளம் தெரியாது. இது முறைகேடுகள், ஊழல் ஆகியவை குறைய வழிவகுக்கும்.
ஆனால், இந்தத் திட்டத்துடன் தொடா்புள்ள பெரும் மதிப்புள்ள மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளில் ஆராயப்படும் விவகாரங்கள், அந்த வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயா் போன்ற ரகசிய தகவல்களை, தில்லியில் வருமான வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றிய வருமான வரித் துணை ஆணையா் விஜயேந்திரா, குஜராத் மாநிலம் பரூச்சில் பட்டயக் கணக்காளா் தினேஷ்குமாா் அகா்வால் ஆகிய இருவா் கசியவிட்டு வந்துள்ளனா்.
தங்களுக்கு எதிரான வருமான வரி வழக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் நபா்களிடம், அந்த விவரங்களை இருவரும் வழங்கியுள்ளனா். இதற்காக அவா்கள் லஞ்சம் பெற்றுள்ளனா்.
இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு விஜயேந்திரா, தினேஷ் குமாா் ஆகியோரை கைது செய்தது என்று சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.