ஐபிஎல் 2025: அண்ணன்-தம்பியா இந்த சிஎஸ்கே வீரர்கள்?
இரண்டு சிஎஸ்கே வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் (மார்ச்.22) தொடங்குகின்றன. சிஎஸ்கே அணிக்கு நாளை இரவு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் சேப்பாகில் விளையாட இருக்கிறது.
கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பை துறக்க, ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லாமலே வெளியேறியது.
சிஎஸ்கே அணியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த்தும் பார்ப்பதற்கு சகோதரர்கள் மாதிரியே இருக்கிறார்கள்.
சமீபத்தில் எடுத்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரச்சின் கண்ணாடி அணிந்தால் ஆண்ட்ரே சித்தார்த் மாதிரியே இருக்கும் எனவும் ரச்சினுக்கு எதாவதென்றால் சித்தார்த்தை களத்தில் இறக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் ஜாலியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
On Rachin Ravindra's bad days, we can sneak in Andre Siddarth on the field by removing his glasses. pic.twitter.com/0CQTGreKZy
— Silly Point (@FarziCricketer) March 22, 2025
Rachin Ravindra Andre Siddharth.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 22, 2025
- Brother from another mother. pic.twitter.com/nDq7Z9WeW0