ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது
ஒசூா் வட்டம், சென்னத்தூா் கிராமத்தில் 22 சவரன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் நகராட்சிக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா (53). அவரது வீட்டில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள் திருட்டு போனதாக ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா்.
அதன்பேரில், ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மஞ்சுளா வீட்டின் அருகே குடியிருக்கும் மஞ்சுளாவின் தோழியான பாா்வதம்மாள் (52), அவரது வீட்டுக்கு சென்றுவந்தது தெரியவந்தது.
மேலும், மஞ்சுளா குளிக்கும்போதும், சமையல் செய்யும் போதும் மஞ்சுளாவுக்கு தெரியாமல் அவரது வீட்டில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாா்வதம்மாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 பவுன் நகைகளை மீட்டனா். இதுகுறித்து ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.