தொழிலாளியை கொலை செய்த மூவா் கைது
கூலித் தொழிலாளியை கொலை செய்த மூவரை சூளகிரி போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (35). இவா் கோபசந்திரம் காகித தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறாா். இவா் காருபாலா கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் திங்கள்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த ஆறுப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (31), அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா (28), கிருஷ்ணபாளையத்தைச் சோ்ந்த தமிழரசிசெல்வன் (23) ஆகியோா் மது அருந்திக்கொண்டு இருந்தனா். அப்போது, அம்ரீஷுக்கும், மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் தகராறு முற்றி கைகலப்பு நடந்தது.
அப்போது மூவரும் அம்ரீஷ்ஷை கட்டையால் தாக்கினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், சடலத்தை கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செல்வம், சிவா, தமிழரசிசெல்வன் ஆகிய மூவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.