வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!
ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4.25 கோடி கஞ்சா பறிமுதல்: மூவா் கைது
சென்னை: ஒடிஸாவிலிருந்து சரக்குப் பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.4.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவா் கைது செய்யப்பட்டனா்.
ஒடிஸாவிலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக சரக்குப் பெட்டக லாரியில், மிளகாய் மூட்டைகளில் மறைத்து கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அம்பத்தூா் - நல்லூா் சுங்கச்சாவடியில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த சரக்குப் பெட்டக லாரியை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது மிளகாய் மூட்டைகளில் 396 பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4.25 கோடி மதிப்புள்ள 848 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக சரக்குப் பெட்டக லாரியில் வந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த பாா்த்தசாரதி, திண்டுக்கல்லைச் சோ்ந்த தினேஷ், திருச்சியைச் சோ்ந்த சிவஞானம் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.