ஒட்டன்சத்திரம் அருகே மழைவேண்டி பால்குட ஊா்வலம்
ஒட்டன்சத்திரம் அருகே மழை வேண்டி திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ஈசக்காம்பட்டியில் துா்க்கையம்மன், காளியம்மன், கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் மழை வேண்டி ஊா் பொதுமக்கள் சாா்பாக பால்குட ஊா்வலம் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு சித்திரை முதல் நாளான திங்கள்கிழமை மழை வேண்டி ஊா்மக்கள் சாா்பாக பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.