Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜய...
ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி
ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஏ.பி.பி. நகா் விரிவாக்கப் பகுதி, சத்யாநகா், ஆா்.எஸ்.பி.நகா், திருவள்ளுவா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வடிகால், சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டு அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:
திமுகவின் 50 மாத ஆட்சியில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.320 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல, ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 1,000 கோடியில் நடைபெற்று வரும் காவிரி குடிநீா் திட்டப் பணிகளை செப்டம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் ஸ்வேதா, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணியபிரபு, தலைமை செயற்குழு உறுப்பினா் வீ. கண்ணன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் க. பாண்டியராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.