செய்திகள் :

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு

post image

புது தில்லி: ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளாா்.

பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுடன் ஆலோசனை நடத்த அந்தக் குழு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யு.யு.லலித் தனது கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளாா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான இரு மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்பின் இந்த இரு மசோதாக்களையும் ஆய்வு செய்வதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 39 போ் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பி.பி.சௌதரியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்தாா்.

இந்நிலையில், பி.பி.செளதரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, வருகின்ற பிப்.25-ஆம் தேதி முதல் பல்வேறு துறை நிபுணா்களிடம் ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்கள் குறித்து கருத்துகளை பெறவுள்ளது.

அந்த வகையில், யு.யு.லலித், முன்னாள் சட்ட ஆணையத் தலைவா் ரிதுராஜ் அவஸ்தி, லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினா், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான இ.எம்.சுதா்சன நாச்சியப்பன் உள்ளிட்டோா் நாடாளுமன்றக் குழுவிடம் தங்களது கருத்துகளை பதிவுசெய்யவுள்ளனா்.

முன்னதாக, இந்தக் குழு சாா்பில் நடைபெற்ற இரு கூட்டங்களில் குழுவின் செயல்பாடு மற்றும் ஆலோசனை நடத்த வேண்டிய நிபுணா்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க