செய்திகள் :

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவிற்கு சாதகமாக அமையும்: கம்மின்ஸ்

post image

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடன் துபையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தியாவின் அடுத்த ஆட்டம் வருகிற ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும். நியூசிலாந்து அணி இதுவரை வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுடன் புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இதுகுறித்து பேசியதாவது:

”இவ்வாறு போட்டி தொடர்வது நல்லது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அத்துடன், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்” என்றார்.

மேலும், ”வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது நன்றாக இருக்கின்றது. கணுக்கால் காயம் குணமாகி வருகின்றது. இந்த வாரம் மீண்டும் ஓட்டப் பயிற்சி மற்றும் பந்துவீச்சைத் தொடங்கவுள்ளேன்” என்று கம்மின்ஸ் கூறினார்.

இதையும் படிக்க | வங்கதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு நியூசி., இந்தியா முன்னேற்றம்!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிட்னி டெஸ்ட்டின்போது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். மேலும், தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் பாட் கம்மின்ஸ் முழுமையாக விலகினார்.

இந்த நிலையில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவேன் என்று பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். 

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (ப... மேலும் பார்க்க

ரூ.20 லட்சத்தில் தொடங்கி ரூ.23.75 கோடி வரை..! என்ன சொல்கிறார் வெங்கடேஷ் ஐயர்!

கேப்டன் பதவி வந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தலைமைத் தாங்க தயார் என்று கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 2-வது முறையாக கோப்பையை வென்ற... மேலும் பார்க்க

கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்: வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாக வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்க... மேலும் பார்க்க

இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!

இந்த பாகிஸ்தான் அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாதென பாக். மகளிரணி முன்னாள் கேப்டன் விமர்சித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபியில் 2 போட்டிகளிலும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தோல்வியடைந... மேலும் பார்க்க

அதிக ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் த... மேலும் பார்க்க