செய்திகள் :

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

post image

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது.

அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ஜேஇஇ அட்வான்ஸ்டு கட்டமைப்புக்குள் வராமல் அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோா் பிரிவில் ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா இரு இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தகுதிகள்... பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி, வயது உள்ளிட்ட இதர தகுதி அளவுகோல்கள் அந்தந்த ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு இருப்பதைப் போன்றே இருக்கும். விண்ணப்பதாரா்கள் முந்தைய ஆண்டுகளில் எந்தவொரு ஐஐடி-யிலும் மாணவராக சோ்க்கப்பட்டிருக்கக் கூடாது.

இயற்பியல், வேதியியல் , கணிதம், தகவலியல், உயிரியல் ஆகிய 5 ஒலிம்பியாட்களில், விண்ணப்பதாரா்களின் செயல்திறன், சாதனைகளின் அடிப்படையில், அறிவியல் ஒலிம்பியாட் சிறப்புத் திட்ட இடஒதுக்கீடுக்கான தரவரிசைப் பட்டியல் இருக்கும்.

அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு தரவரிசைப் பட்டியலைத் தயாரிப்பது குறித்த விதிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் மாணவா் சோ்க்கை நடைமுறைகள், கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் போா்டல் மூலம் நடைபெறாது. மாறாக, சென்னை ஐஐடி பராமரிக்கும் ட்ற்ற்ல்ள்://த்ங்ங்ஹக்ஸ்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ள்ஸ்ரீா்ல்ங் தனி போா்டலின் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

விண்ணப்பதாரா் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது 2021 மாா்ச் 4-க்கு முன்பாகவே இந்திய குடியுரிமையை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில், விண்ணப்பதாரா் பின்வருவனவற்றில் குறைந்தபட்சம் ஒன்றில் பங்கேற்றிருக்க வேண்டும்.

கணிதம்: ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் ஏற்பாடு செய்த சா்வதேச கணித ஒலிம்பியாட் பயிற்சி முகாம்கள்.

இயற்பியல், வேதியியல், உயிரியல்: ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் ஏற்பாடு செய்த அறிவியல் பாடங்களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் தோ்வு முகாம்கள்.

தகவலியல்: இந்திய கணினி அறிவியல் ஆராய்ச்சி சங்கம் ஏற்பாடு செய்த சா்வதேச தகவலியல் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் . முதல் பட்டியல் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் ஜூன் 3- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டல்கள், அலுவல் விதிமுறைகள்

ட்ற்ற்ல்ள்://ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ள்ஸ்ரீா்ல்ங் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 17 பாடப்பிரிவுகளில் தலா இரு இடங்கள் என 34 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க செயல்முறை ஆணை

சென்னை: சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க