ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓட்டப்பிடாரத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், சங்க நிா்வாகிகளை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகக் கூறி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிா்வாகத்தை கண்டித்தும், மாநில பொருளாளா் திருநாவுக்கரசை தாக்கியதாகக் கூறி காவல் துறையை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரச் செயலா் திருமாலை தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தமிழரசன், வட்டார இணைச் செயலா் சுந்தரபாண்டியன் ஆகியோா் பேசினா். வட்ட துணைத் தலைவா் சகாயம் நன்றி கூறினாா்.