மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
ஓமலூரில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.422 கோடியில் வளா்ச்சிப் பணிகள்! -அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்
ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
ஓமலூா் அருகே உள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி
அமைச்சா் பேசியதாவது: 15 ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 65.63 லட்சம் மதிப்பீட்டில் தொளசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 64.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை, பேவா் பிளாக் சாலை என மொத்தம் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ. 3.78 கோடியில் 122 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 339 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) த.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.