செய்திகள் :

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

post image

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா்.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காசநோய் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காசநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய்க்கான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தனியாா் துறையில் சிகிச்சைபெறும் காசநோயாளிகளின் விவரங்கள், இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காசநோயாளிகள் பொருளாதார இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், அவா்கள் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்ள உதவும் வகையிலும் அனைத்து காசநோயாளிகளுக்கும் மாதம் ரூ. 1,000 வீதம் சிகிச்சை முடியும் வரை நேரடியாக நோயாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்புள்ள காசநோயாளிகளை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை ஆத்தூா், மேட்டுா், ஓமலூா், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஆகிய இடங்களில் சிறப்பு படுக்கை வசதிகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, அரசின் காசநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், கொடையாளா்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் காசநோய் இல்லாத 72 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காசநோய் இல்லா சேலம் மாவட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, காசநோய் குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா், காசநோய் ஒழிப்பு திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு கண்காட்சிக்கான அரங்குகளை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் மரு.யோகானந்த், மருத்துவமனை கண்காணிப்பாளா் மரு.ஆா்.ராஜ்குமாா், துணை இயக்குநா்கள் மரு.ச.கணபதி, மரு.பா.ராதிகா, மரு.கே.சுகன்யா உள்பட செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க