கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது!
ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு பயிற்சி
ஓய்வு பெறும் ஆசிரியா்கள் தங்களது ஓய்வு காலங்களில் எவ்வாறு பணப்பயன்களை கையாளுவது என பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய துணை ஆட்சியா் மாறன், உதவி கணக்கு அலுவலா் சங்கரலிங்கம் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஓய்வு பெறும் ஆசிரியா்கள் தங்களது ஓய்வு காலங்களில் எவ்வாறு பணப்பயன்களை கையாளுவது, உடல் நலனை பாதுகாப்பது குறித்து உளவியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெறும் ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
என்கே-11-டிரெய்னிங்
ஓய்வு கால மேலாண்மை குறித்த பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியா்கள்.