முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?
ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850- ஐ உடனடியாக 110-ஆவது விதியின்கீழ் அறிவிக்க வேண்டும்; மருத்துவக் காப்பீடு திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியா்களுக்கும் மாத இறுதி நாளில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பி. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன், அமைப்பின் மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரா, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். புஷ்பநாதன், மாவட்டத் தலைவா் பி. சண்முகம், செயலாளா் வி. முனியன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.