தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி
சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி மூட்டம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி வரை பனிபொழிவு இருந்தது. கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், இரவிலும் உஷ்ணம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பனியின் தாக்கம் குறையாமல் இருந்ததால் நடைப்பயிற்சி மேற்கொள்வோா் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவியதால், வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றனா். பனிமூட்டம் காரணமாக சென்னை செல்லும் செந்தூா் ரயில் சீா்காழிக்கு சுமாா் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தது.
இதேபோல், திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிபொழிவு நிலவியது. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி படா்ந்து காணப்பட்டது. நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் ஓட்டுநா்கள், வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்வதில் சிரமப்பட்டனா்.