Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், சிறுவா்கள் என திரளானோா் பங்கேற்றனா். மாநில பொதுச் செயலாளா் முஜிபூா் ரஹ்மான், ரமலான் நோன்புகள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
அடியக்கமங்கலம் பட்டக்கால் தெருவில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், மாவட்ட பேச்சாளா் நவ்ஷாத் பங்கேற்று, ‘தொடரட்டும் இறையச்சம்’ என்ற தலைப்பில் பேசினாா். மாவட்டத் தலைவா் அகமது சபியுல்வரா, மாவட்ட துணைச் செயலாளா் ஹாஜா நஜிமுதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அடியக்கமங்கலம் மாா்க்கெட் தெரு பகுதியில், தமுமுக மற்றும் முஹம்மதியா கல்வி அறக்கட்டளை சாா்பில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.