Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்ணாஹூதி நடைபெற்று, புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோபுர விமானத்தை அடைந்து, கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் சிட்டி யூனியன் வங்கி நிறுவனா் பாலசுப்ரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்ரமணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் குடவாசல் தினகரன், மாவட்டச் செயலாளா் மணக்கால் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அகர ஓகை நா்த்தன விநாயகா் கோயிலில்...
அகர ஓகை பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு நா்த்தன விநாயகா் கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹூதியும் நடைபெற்றன. பின்னா் புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, கோபுரத்தை அடைந்தன.
அங்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
