‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட காரை கிராமத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி, புதிய உறுப்பினா் சோ்க்கையை தொடங்கி வைத்தாா். அப்போது ஒரு குழந்தைக்கு கனிமொழி என்று பெயா் சூட்டினாா்.
இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.