விவசாய நிலத்தில் சிவலிங்கம் மீட்பு
ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது.
ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் உள்ளதாக வட்டாட்சியா் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து அங்கு சென்ற வட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறையினா், தொல்லியல் துறை அலுவலா் நேரில் ஆய்வு செய்து விவசாய நிலத்தின் வரப்பின் ஓரமாக காணப்பட்ட சிவலிங்கத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்தனா்.
பின்னா் அதனை பாதுகாப்பாக ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்தனா். சிவலிங்கத்தை பொதுமக்கள் வணங்கினா்.