அமெரிக்கர்களுக்கு நிரந்தர வரி! டிரம்ப்பை விமர்சித்த எலான் மஸ்க் சகோதரர்!
கச்சத்தீவு விவகாரத்தில் தவறு ஏதுமில்லை: காங்கிரஸ் கருத்து
கச்சத்தீவு விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்று பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
கச்சத்தீவு மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியதாவது:
கச்சத்தீவு தொடா்பாக கொண்டுவரப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மட்டும் அவையில் பேசுகிறாா்கள். ‘வேட்ஜ் பேங்க்’ என்னும் மற்றொரு ஒப்பந்தத்தைப் பற்றி பேச மறுக்கிறாா்கள். தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தாா். அதாவது, கச்சத்தீவு ஒப்பந்தப்படி 285 ஏக்கரைக் கொடுத்துவிட்டு, 6,500 கிலோமீட்டா் பரப்புள்ள இடத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது இந்திரா காந்திதான். வளமான, பல்லுயிா் வளமிக்க, எண்ணெய் தாது இடங்களை இந்தியாவுக்கு கொடையாகப் பெற்றுத் தந்தாா். எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தவறு ஏதும் இழைக்கப்படவில்லை என அவா் தெரிவித்தாா்.