பஞ்சாப்: மாணவர்களுடன் கால்வாயில் விழுந்த தனியார் பள்ளி பேருந்து
கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து சென்ற கேரள, சென்னை இளைஞா்கள் இருவரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த வடக்கு பகுதி ஐ.ஜி.யின் சிறப்பு தனிப்படை போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
போதை பொருள் கடத்தல் தடுக்க தனிகவனம் செலுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் மாறுவேடங்களில் கண்காணித்து, போதை பொருள்களை கடத்திச் செல்வோரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா்.
தனிப்படை போலீஸாா் அரக்கோணம் நகரில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ராம்கோ மேம்பாலம் அருகே கையில் பையுடன் நடந்து சென்ற இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை நடத்தினா்.
அவா்களில் ஒருவா் சென்னை, அஸ்தினாபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் (28), என்பவரிடம் இருந்த பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவையும், உடன் வந்த மற்றொருவா் கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த அஷ்ரப் புதீன் (21) கையில் இருந்த பையிலிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதை தொடா்ந்து இருவரும் கைது செய்த தனிப்படையினா், அவா்களை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.