இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேருக்கு அபராதம்
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பூா், சின்னபொம்மநாயன்பாளையத்தில் கடந்த 2022 டிசம்பா் 29-ஆம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ரோலிங்டன் (31) என்பவரை அனுப்பா்பாளையம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 3- இல் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், ரோலிங்டனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதித் துறை நடுவா் முருகேசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதேபோல, அங்கேரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரகுநாத் நாயக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்பளிக்கப்பட்டது.