குடியிருப்புகளுக்கு அருகில் மேலும் புதிய நியாய விலைக்கடைகள்: அமைச்சா் எம்.ஆா்.கே...
கஞ்சா விற்ற இளைஞா் கைது
திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தூதை கிராமத்தைச் சோ்ந்த காத்த்திகைசாமி மகன் பெரியசாமி (22) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரை போலீஸாா் கைது செய்து, இவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.