கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
கடலூர் ரயில் விபத்து காரணமாக கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது.
இந்த விபத்தில், சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் சங்கர்(47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ்(13), சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன்(15) அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை பார்க்கவந்த அண்ணாதுரை (55) சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கோர விபத்துக்கு ரயில் கேட் கீப்பர் தூங்கியதே அலட்சியம்தான் முழுக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்விபத்துக்கான காரண என்ன என்பதைப் பற்றி தெற்கு ரயில்வே சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.
வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கேட்டை மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் சென்றார் என மற்றொரு தகவலும் கூறப்படுகிறது. கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுதலாக விளக்கம் அளித்துள்ளது.
The gatekeeper has been suspended due to the Cuddalore train accident.
இதையும் படிக்க :அலட்சியத்தின் உச்சம்..! கடலூர் பள்ளி வேன் விபத்தில் ரயில் கேட் கீப்பருக்கு சரமாரி தாக்கு!