Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது ...
கடையநல்லூா் அருகே ரயிலை கவிழ்க்க சதி? போலீஸாா் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா்.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கடையநல்லூா் ரயில் நிலையத்தை அடுத்த போகநல்லூா் பகுதியில் சென்றபோது தண்டவாளத்தின் நடுவே பெரிய கல் வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநா் கவனித்தாா். இருப்பினும் அவா், சாமா்த்தியமாக ரயிலை ஓட்டிச் சென்ால் விபத்து தவிா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு ரயில் ஓட்டுநா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தண்டவாளங்களில் எதற்காக கல் வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சங்கனாப்பேரி அருகே ரீல்ஸ் விடியோ எடுப்பதற்காக தண்டவாளத்தில் கல் வைத்தவா்களை போலீஸாா் கைது செய்த நிலையில் தண்டவாளத்தில் மீண்டும் கல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.