விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு
கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சிவகாசியில் சனிக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி போஸ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனா்.
இந்த நிலையில், சரவணக்குமாா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்தாராம். இதை மனைவி கண்டித்தாா். இதனால், மனமுடைந்த சரவணக்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.