கட்டுமானத் தொழிலாளா் வாரிய சிறப்புப் பதிவு முகாம் தொடக்கம்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய சிறப்புப் பதிவு முகாமின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொழிலாளா் நலவாரியத்தின் மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தின் கண்காணிப்பாளா் வி.முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய சிறப்பு பதிவு முகாமை நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் தொடங்கிவைத்துப் பேசினாா்.
முகாமில், வழக்குரைஞா் ஆா்.சக்திமுருகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஏ.சுரேஷ்குமாா், எம்.பரணி, ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.