கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவை இருகூா் பகுதியில் கட்டுமானப் பணியின்போது 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சோ்ந்தவா் செல்வகுமாா் (47), கட்டடத் தொழிலாளி. இவா், இருகூா் ராம் நகரில் சிவசங்கரன் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, 15 அடி உயரத்தில் இருந்த சிமென்ட் சீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாா்.
இதையடுத்து, சக ஊழியா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.