Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
கதாநாயகனாகும் விஜய் டிவி பாலா! இயக்குநர் யார் தெரியுமா?
விஜய் டி.வி. பாலா புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு? குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வெட்டுக்கிளி பாலா. இவர் அந்த நிகழ்ச்சிகளில் நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தாலும், அவ்வப்போது ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
துவக்கத்தில், சிறியளவில் உதவிகளைச் செய்து வந்த அவர் பின்னர் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் போன்றோருடன் இணைந்து தனது தொண்டுகளை விரிவுப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக செயல்பட்டு வந்த பாலா தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் வைபவின் 25-வது படமாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘ரணம் - அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தின் இயக்குநரான ஷெரீஃப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமுக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பாலா #01 என்ற தலைப்பில் வெளியான அந்தப் போஸ்டரை இந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குநர் ஷெரீஃப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளனர்.
மேலும், விவேக்- மெர்வின் ஆகியோரின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய் சேதிபதியின் ’ஜுங்கா’ படத்தின் மூலம் பாலா தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:நடிகர் அர்ஜூன் மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!