கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் விளம்பரப் பதாகை வைக்கத் தடை!
கந்தா்வகோட்டை - தஞ்சை சாலை வளைவில் பதாகை வைப்பதற்கு காவல் துறையினா் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் குறுகிய வளைவுப் பகுதி இருப்பதால் இங்கு வைக்கப்படும் விளம்பரப்ப தாகை உள்ளிட்டவற்றால் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதியாக இருக்கிறது.
இதனை கவனத்தில் கொண்ட கந்தா்வகோட்டை காவல்துறையினா் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றி இந்தச் சாலைப் பகுதியில் எவரும் விளம்பர தட்டிகள் வைக்க கூடாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனா்